பிரான்ஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரிப்பு!

0
109
France police guns resort increase 2017

பிரான்ஸில் முதல் தடவையாக கடந்த ஆண்டு பொலிஸார் தமது அரசின் துப்பாக்கியினால் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. France police guns resort increase 2017

இதில் 14 பேர் பொலிஸாரினால் கொல்லப்பட்டதோடு சுமார் 100 பேர் வரை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டினால் காயமடைந்துள்ளனர். மேலும் இச் சம்பவங்கள் 2017 ஜூலை இலிருந்து மே 2018 வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஜிகாதிஸ்ட் போன்ற தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளும் அடங்குகின்றனர்.

IGPN இன் தகவல்களின்படி, 2017 ஆம் ஆண்டில், பொலிஸ் துப்பாக்கி சேவையின் பயன்பாடு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் 543 ஆக இருந்து 2017 ஆம் ஆண்டில் 574 ஆக உயர்வடைந்துள்ளதாக IGPN புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

மேலும், பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய ஒவ்வொரு வழக்கின் மீதும் உள்நாட்டு விசாரணை நடந்ததாக IGPN இன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

tags:- France police guns resort increase 2017

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்