பௌத்த தர்மத்தை பின்பற்றினால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் – பிரதமரின் பொசொன் பௌர்ணமி தின செய்தி

0
146
full moon poya day prime minister ranil wickramasinghe Tamil news

புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றுவோமாயின் அந்தத் தடைகளைத் தகர்த்தவாறு நிலைபேறான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். full moon poya day prime minister ranil wickramasinghe Tamil news

பிரதமரின் பொசொன் பௌர்ணமி தின செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்த மதம் கிழக்குப் பகுதியில் தோற்றம் பெற்ற தனிச்சிறப்பான ஆன்மீகத் தத்துவமாகும். அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட, சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கும் புத்த மதத்தினை சமாதானம், நல்லிணக்கத்திற்கு, ஆன்மீக மேம்பாட்டிற்கான வழிமுறையாகக் கொண்டு முழு உலகிற்கும் அதன் உண்மையான உள்ளடக்கத்தை அனுபவரீதியாக அறியச் செய்வது எமது பொறுப்பாகும்.

மஹிந்த தேரர் தலைமையிலான குழுவினரால் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு எமது நாட்டின் ஆட்சி பீடம், இலக்கியக் கலைகள், விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் உட்பட முழு சமூகத்திலும் தெளிவான உயிர்ப்பு ஏற்பட்டது. புத்த மதத்தின் உள்ளடக்கம் நவீன முன்னேற்றமடைந்த சமூகத்தில்கூட ஆன்மீகரீதியாக செழிப்படைந்த, சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கு, சமூகத்தை மிகவும் நியாயமான, சிறந்த இடமாக மாற்றியமைப்பதற்கு மிகவும் உதவுகிறது.

நாம் அந்த தர்மத்தின் ஒளியை, அதன் விளக்கத்தைப் பெற்றுக் கொள்வோமாயின் வெறுப்பு, குரோதம், ஒற்றுமையின்மை எம்மிடம் காணப்படுவதற்கு எந்த வாய்ப்புமில்லை. இதற்குக் காரணமாய் அமையும் பல்வேறுபட்ட சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகள் உள்ளன என்பது உண்மையே. எனினும் உண்மையாகவே புத்தர் போதித்த தர்மத்தைப் பின்பற்றுவோமாயின் அந்தத் தடைகளைத் தகர்த்தவாறு நிலைபேறான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப முடியும்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். தர்மத்தினைப் புரிந்து கொள்வதன் மூலம் அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்பும் பொசொன் தினமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tags :- full moon poya day prime minister ranil wickramasinghe Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites