தொலைக்காட்சியில் திகிலூட்டும் காட்சி; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி

0
119
Terrifying scene television 10 year old boy killed

தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் திகிலூட்டும் செயற்பாடுகளை பின்பற்றிச் சென்ற 10 வயது சிறுவனின் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (Terrifying scene television 10 year old boy killed)

இவ்வாறு உயிரிழந்த சிறுவன், வாரியபொல, நேபொடைவௌ வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என்றும் தெரியவந்துள்ளது.

வீட்டில் ஒருவரும் இல்லாத போது, இந்தச் சிறுவன் தனது இல்லத்தில் படுக்கை அறையில் கொசு வலையை தொங்கவிடும் கொக்கியில் தொங்கி விளையாடியுள்ளார்.

இதன்போது, இந்தக் கொக்கியில் சிறுவனின் கழுத்து இறுகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை தெரிவிக்கையில், எனது மகன் கொக்கியில் தொங்கி விளையாடுவேன் என கூறியுள்ளான்.

ஆனால், நாங்கள் அதனைக் காணவில்லை. தொலைக்காட்சியை பார்த்தே இதனைக் கற்றுள்ளான். அவன் எப்போதும் ரிவி முன் தான் இருப்பான்.

எனது மகனுக்கு இவ்வாறு எதுவும் நடக்கும் என நினைக்கவில்லை. எங்களின் மகன் உயிரிழந்துள்ளான்.

மற்றைய சிறுவர்களுக்கு இவ்வாறு எதுவும் நடக்கக்கூடாது என்றே இதனை நான் கூறுகின்றேன் என்று உயிரிழந்த சிறுவனின் தகப்பனான 41 வயதுடைய டப்.எம். உபுல் ஷாந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

tags :- Terrifying scene television 10 year old boy killed

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites