அவுஸ்திரேலிய அணிக்கு இன்று இறுதி வாய்ப்பு…!

0
55
Australia vs Peru world cup 2018 news Tamil

பிபா உலகக்கிண்ணத் தொடரின் குழு சீ யிற்சான போட்டியில் இன்று அவுஸ்திரேலியா மற்றும் பெரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக்கிண்ண வரலாற்றில் இரண்டு அணிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன.

அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ண குழுநிலை ஆட்டத்தை பொருத்தவரையில், தென் அமெரிக்க அணிகளுடன் மொத்தமாக மூன்று போட்டிகளில் மோதியுள்ளது.

இதில் ஒரு போட்டியில் மாத்திரம் ஒரு கோலை அடித்து, ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

எனினும் இம்முறை உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி, பெரு அணியை விடவும் முன்னிலையில் இருக்கின்றது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவுஸ்திரேலிய அணி டென்மார்க் உடனான போட்டியை சமப்படுத்தி ஒரு புள்ளியை பெற்றுள்ளது. ஆனால் பெரு அணி தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து, உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியுள்ளது.

எவ்வாறாயினும் தங்களுடைய ஆறுதல் வெற்றிக்காக இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதுகின்றது.

அவுஸ்திரேலி அணி ஒரு புள்ளியை பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. எனினும் இன்று நடைபெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் அணி டென்மார்க் அணியை வீழ்த்தினால் மாத்திரமே அவுஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு.

இந்த போட்டி சமனிலையில் நிவுபெறுமாயின், பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியா மற்றும் பெரு ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று இரவு 7.30க்கு நடைபெறவுள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Australia vs Peru world cup 2018 news Tamil, Australia vs Peru world cup 2018 news Tamil, Australia vs Peru world cup 2018 news Tamil