இருவர் சடலமாக மீட்பு : குருநாகல் பகுதியில் சம்பவம்

0
141
incident happened Kurunegala area

குருநாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (incident happened Kurunegala area)

நேற்று (24) மாலை குறித்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல், வாரியபொல, மலகனே குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 பேர் சென்ற படகு விபத்துக்குள்ளானதாகவும் அதில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் காணாமல் போயிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

tags :- incident happened Kurunegala area

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites