(Wedaruwe Upali Thero issues clarification Hitler comments)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் 69 வது பிறந்த தினத்தன்று இடம்பெற்ற நிகழ்வில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்யும் போது நேரடியான கொள்கை இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் போன்று மனிதர்களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் என்று தான் அர்த்தப்பட கூறவில்லை என்றும் அவர் தனது முன்னைய கருத்தை மறுதளித்துள்ளார்.
அவர் நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்தாவது இலங்கையைக் கட்டியெழுப்புமாறு அண்மையில் வெடருவே உபாலி தேரர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Wedaruwe Upali Thero issues clarification Hitler comments)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- டில்லியில் பட்டப்பகலில் ராணுவ தளபதியின் மனைவி கழுத்தறுத்து கொலை
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- “வல்லரசு” அணிகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பெல்ஜியம்
- நெல்சன் மண்டேலா யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டார்
- காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு
- புதிய அரசியல் யாப்பை நிறைவேறுவதற்கான சாத்தியமில்லை என்பதை ஏற்க முடியாது – சம்பந்தன்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை