கோட்டாபயவின் பிறந்த தினத்தில் தான் கூறியதை மறுக்கிறார் உபாலி தேரர்

0
353
Wedaruwe Upali Thero issues clarification Hitler comments

(Wedaruwe Upali Thero issues clarification Hitler comments)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் 69 வது பிறந்த தினத்தன்று இடம்பெற்ற நிகழ்வில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் போது நேரடியான கொள்கை இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் போன்று மனிதர்களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் என்று தான் அர்த்தப்பட கூறவில்லை என்றும் அவர் தனது முன்னைய கருத்தை மறுதளித்துள்ளார்.

அவர் நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவந்தாவது இலங்கையைக் கட்டியெழுப்புமாறு அண்மையில் வெடருவே உபாலி தேரர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Wedaruwe Upali Thero issues clarification Hitler comments)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites