மகளை கொல்ல முயன்ற தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி முன்னாள் போராளி மரணம்

0
486
long discussion finish murder knife attack neck spot dead puttalam

(tamilnews father attacked knife daughter ex ltte cader killed)

பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை கத்தியால் குத்த முயன்ற போது அதனை தடுக்க முனைந்த முன்னாள் போராளி ஒருவர் அந்த தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதான சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்ற முன்னாள் போராளியே சம்பவத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமரி ரொட்டை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் முஸ்லிம் குடும்பம் ஒன்று நுன்கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கிடையே முறுகல் ஏற்பட்டுவந்த நிலையில் குறித்த தந்தை தனது மகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது, அருகில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி அதனைக் கண்டு தடுக்க முற்பட்டபோது கத்திக்குத்துக்கு இலக்கானார்.

இதனையடுத்து கத்தி குத்து தாக்குதல் நடாத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews father attacked knife daughter ex ltte cader killed)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites