மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லை : நடிகை ஹனிரோஸ் பகீர் தகவல்..!

0
58
Honeyrose harassment complained Malayala Cinema,Honeyrose harassment complained Malayala,Honeyrose harassment complained,Honeyrose harassment,Honeyrose
Photo Credit : Google Image

நடிகைகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், மலையாள பட உலகிலும் இதுபோன்ற தொல்லைகள் இருக்கிறது என்று நடிகை ஹனிரோஸ் கூறியுள்ளார்.(Honeyrose harassment complained Malayala Cinema)

அதாவது, நடிகைகளுக்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் செக்ஸ் தொல்லைகள் கொடுப்பதாக உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆஸ்கர் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி படுக்கைக்கு தன்னை அழைத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மகளிர் ஆணையமும் அரசும் விசாரணையில் இறங்கி உள்ளன.

மேலும், இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று பிரபல நடிகை ஹனிரோஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தமிழில் ”காந்தர்வன்”, ”சிங்கம்புலி”, ”மல்லுக்கட்டு” உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ”ஒன் பை டூ” என்ற மலையாள படத்தில் உதட்டோடு உதடு முத்தமிட்டு நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

பாலியல் தொல்லை குறித்து ஹனிரோஸ் அளித்த பேட்டி வருமாறு.. :-

“மலையாள பட உலகிலும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அதை ஏற்பதும் ஏற்காததும் நமது கையில்தான் உள்ளது.

நடிக்க வாய்ப்பு கேட்கும் ஆரம்ப காலத்தில் எல்லா நடிகைகளுமே போராடத்தான் வேண்டி இருக்கிறது. அப்போது சிலர் நடிகைகளை மூளைச்சலவை செய்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலையாள படத்தில் நான் நடித்த முத்த காட்சி படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியது வேதனையாக இருந்தது.”

இவ்வாறு நடிகை ஹனிரோஸ் கூறினார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பெரும் பரபரப்பு..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Honeyrose harassment complained Malayala Cinema

Our Other Sites News :-

125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை