அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா

0
232

(argentina players angry coach sampaoli forhis poor tactic)

மிகச் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அர்ஜென்டினா அணியின் மோசமான தோல்விகளுக்கு அதன் பயிற்சியாளர் சம்பாவ்லியே காரணம் என பல தரப்பினராலும் குற்றம்சுமத்தப்பட்டது.

அர்ஜென்டினா வீரர்களும் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை, இரண்டு உலககோப்பைகளை வென்றுள்ள அர்ஜென்டினாவின் 2018 உலககோப்பை கனவு குழு சுற்றோடு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

தான் இடம்பெற்றுள்ள “டி” குழுவில் முதல் இரண்டு ஆட்டங்களையும் வெல்ல முடியாமல் கடைசி இடத்தைப் பெற்று, மூன்றாவது மற்றும் இறுதி பிரிவு சுற்றுப் போட்டியில் நைஜீரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அப்படியே வென்றாலும், பிற அணிகளின் வெற்றி, தோல்விகள் அடிப்படையிலேயே, அர்ஜெண்டினா காலிறுதிக்கு தகுதி பெறுமா என்பது தெரியவரும்.

இது அர்ஜென்டினாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை பிரிவு சுற்று போட்டிகளில், அர்ஜென்டினா தன் முதல் ஆட்டத்தை ஐஸ்லாந்தோடு 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது.

அப்போதே, முன்னாள் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மரடோனா அவரை எச்சரிக்கும் வகையில், சம்பாவ்லி தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவிட்டால், நாட்டுக்கு திரும்ப முடியாது” கூறியிருந்தார்.

சம்பாவ்லி சரியான வகையில் திட்டமிடவில்லை என பலரும் இந்த போட்டிக்குப் பின் கூறினார்கள்.

அதற்கு பின் இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அதிரடியாக அர்ஜென்டினாவை நிலைகுலைய வைத்தது. தற்போது மூன்றாவது ஆட்டத்தில் நைஜீரியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர்கள், சம்பாவ்லியை கோச் பதவியில் இருந்து மூன்றாவது ஆட்டத்திற்கு முன் நீக்க வேண்டும் என கூறியதாக செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்திக்கு, அர்ஜென்டினா அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எப்படியோ, மரடோனா எச்சரித்தது போல சம்பாவ்லி அர்ஜென்டினாவிற்குள் இனி கால் வைக்க முடியாது என தெரிகிறது.

Read more at: https://tamil.mykhel.com/football/argentina-players-angry-over-the-coach-sampaoli-for-his-poor-tactics-and-statements-about-players/articlecontent-pf23908-010654.html

(argentina players angry coach sampaoli forhis poor tactic)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites