மாத்தறையில் தொடரும் பதற்றம் : பொலிஸ் அதிகாரி பலி

0
348
armed robbers Matara update

மாத்தளை நகரில் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடைபெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.(armed robbers Matara update)

மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண கடை ஒன்றில், இரு மோட்டார் சைக்கிள்களில் கொள்ளையடிக்க வந்த குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கி சூட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொள்ளையர்கள் தன்னியக்க துப்பாக்கி மூலம் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகளும், ஒரு பொதுமகனும் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுகின்றது.

tags :- armed robbers Matara update

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites