பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் செல்வோருக்கான எச்சரிக்கை!

0
32
19 year refugee commit suicide Croisilles France

பா-து-கலேயின் Croisilles பகுதியில் உள்ள அகதி முகாம் ஒன்றில், 19 வயதுடைய Ghanéen எனும் அகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். (19 year refugee commit suicide Croisilles France)

இச்சம்பவம், புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பா-து-கலேயின் Croisilles பகுதியில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள் எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடும் நோக்கில் வசிக்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்த குறித்த 19 வயதுடைய இளம் அகதி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி தான் இந்த முகாமுக்கு வந்திருந்தான். இப்பகுதியிலுள்ள அகதி முகாமில் வசிப்பவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருக்கும் அனைவரும் மனநல மருத்துவரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன என அப்பகுதி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர் Guillaume Alexandre, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தற்கொலை செய்துகொண்ட குறித்த அகதிக்கும், நேற்று மனநல மருத்துவரை சந்திப்பதற்குரிய முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த நபரின் இறுதிச்சடங்கு நேற்று மாலை இடம்பெற்றது.

tags :- 19 year refugee commit suicide Croisilles France

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**