காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் பலி

0
106
Three killed wild elephant attack

நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹிபிட்டிய ஆதாவல, மடவள உல்பத பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். (Three killed wild elephant attack)

லிஹிபிட்டிய வனப்பகுதிக்கு அருகில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மடவள உல்பத பகுதியை சேர்ந்த சுமுது லக்மால் பண்டார ஹேரத் என்ற 30 வயதுடைய ஒருவரும், நாலக ருவன் எனும் 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நாவுல நீதிபதியால் மரண விசாரணைகள் நடைபெறவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கிராந்துருகோட்டே விராணகம கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென காட்டு யானையொன்று இவர்களை தாக்குவதற்கு பின்தொடர்ந்துள்ளது.

இதன்போது, குறித்த யானையிடம் இருந்து தப்பியோடிய நபரொருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததனால் யானை இவர் அருகில் சென்று இவரைத் தாக்கியுள்ளது.

கிராந்துருகோட்டே வனவிலங்கு காரியாலயத்தின் யானை கட்டுப்பாட்டு பிரிவின் வனவிலங்கு அதிகாரியான படுகாயமுற்ற 53 வயதான எம்.யூ. வஸந்த உதயசிறி என்பவரை கிராந்துருகோட்டே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Three killed wild elephant attack

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை