10 வருடம் இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய பொறியியலாளர் கைது

0
98
10 year young woman abusive Engineer arrested

அக்குரஸ்ஸ பகுதியில் பத்து வருடங்களாக இளம் பெண்ணை கொடுமைப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(10 year young woman abusive Engineer arrested)

அக்குரஸ்ஸ பரதுவ பரகாஹேன பிரதேசத்தை சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் காலி அலுவலக பொறியிலாளரான 45 வயதான அசங்க விராஜ் ஏக்கநாயக்க என்ற பொறியியலாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிதான நீதவான் பவித்ரா சஞ்ஜீவனி பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 18 வயதுடைய பெண்ணொருவர் கொடுமைகளை தாங்கி கொள்ளாது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேக நபரான பொறியியலாளருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் காலி பிராந்திய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி வருணி கேஷலா போகாவத்தவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் அனுராபுரத்திற்கு சென்று குறித்த பெண்ணை காலிக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டே போது 10 வருட காலமாக குறித்த பொறியியலாளர் கொடுமைப்படுத்தியமை தெரியவந்துள்ளது.

இந்த பெண் தனது எட்டு வயதில் இருந்து சந்தேகநபருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலை இறப்பர் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார்.

இந்த காலத்தின் போது, சாரதி ஒருவர் யுவதியின் முகத்தை பார்த்தார் என்பதற்காக சந்தேகநபர் குறித்த பெண்ணின் முகத்தில் ஒருவகை திரவத்தை வீசியுள்ளார்.

இதில் இருந்து தப்பிப்பதற்காக குறித்த பெண் கீழே குனிந்ததால், திரவம் பெண்ணி முதுகில் பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் வைத்தியர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து சென்று, காயத்திற்கு சிகிச்சையளித்துள்ளார்.

சந்தேக நபரான பொறியியலாளரின் கொடுமை தாங்காது குறித்த பெண் கடந்த வருடம் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.

சந்தேக நபர் பத்திரிகையில் விளம்பரத்தை செய்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த பெண்ணை அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் இந்தப் பெண் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபர் அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த பெண் வழங்கிய தகவல்களுக்கு அமைய சந்தேக நபரான பொறியியலாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

tags :- 10 year young woman abusive Engineer arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை