பெண் குழந்தையை பெற்றெடுத்த சாதனை பிரதமர்!!

0
325
New Zealand Prime Minister Delivered Baby

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்சன் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் ஜெசிந்தா என்பது குறிப்பிடத்தக்கது.New Zealand Prime Minister Delivered Baby

நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நியூசிலாந்து நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு ஜெசிந்தா பிரசவத்திற்காக ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாலை 4.45 மணிக்கு அழகான பெண் குழந்தையை பிரசவித்தார்.

தானும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும், தானும் தன் துணைவரும் பெற்றோராக மாறியுள்ளது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்மை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனக்குறிப்பிட்டிருந்தார்.

பதவியில் இருக்கும் போது குழந்தையை பெற்றெடுத்த உலகின் இரண்டாவது பெண் தலைவர் என்ற பெருமையும் ஜெசிந்தாவை சேரும்.

tags :- New Zealand Prime Minister Delivered Baby
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்