இன்று உலகளாவிய ரீதியில் நான்காவது நாளாக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது .நாடளாவிய ரீதியில் யோகா தொடர்பாக பல நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணம் இருகின்றது .(Baba Ramdev Interesting News Latest Gossip )
இந்நிலையில் யோகா மட்டுமல்லது ஆயுர்வேதம், அரசியல்,பிஸ்னஸ் என பல துறைகளிலும் புகுந்து விளையாடி வரும் பாபா ராம்தேவ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ராம்தேவ் ஹரியானா மாநிலத்தில் உள்ள மஹேந்திரகார் என்ற மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபா தேவி இவருக்கு ராமகிருஷ்ண யாதவ் என்று பெயர் சூட்டினர். அலிப்பூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்த ராம் தேவ் அதன் பிறகு திடீரென்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார்.
தான் கற்றுக் கொண்ட யோகாவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பியவர் திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். ஆச்சார்யா நிதின் சோனி நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய யோகா பயிற்சியை முதன் முதலாக ஆஸ்தா என்ற தொலைகாட்சியில் செய்தார். இதற்கும் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
நாளுக்கு நாள் அவரது புகழ் அதிகரித்துக் கொண்டே சென்றது. அமிதாப் பச்சன்,ஷில்பா ஷெட்டி உட்பட பல பிரபலங்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதோடு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இஸ்லாமிய மத குருமார்கள் பயிலும் கல்லூரியிலும் யோகா பயிற்சி அளித்திருக்கிறார். இவருடைய பதஞ்சலி யோகபீடத்திற்கு ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு தீவையே இவரை பின்பற்றும் தம்பதியனர் காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள்.
ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி அதனை நடத்தி வருகிறார் இங்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி மையம் என்று சொல்லப்படுகிறது இவருடைய சொத்து மதிப்பு மட்டும் முப்பது பில்லையனைத் தாண்டும் என்கிறார்கள்.
பாபா ராம்தேவின் யோகா பயிற்சியை நேரடியாக நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு லட்சக்கணக்கில் நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். முதல் வரிசையில் உட்கார ஐம்பதாயிரத்திலிருந்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது சாதரண நாட்களில், ஏதேனும் விஷேச தினம் என்றால் முதல் வரிசையில் உட்காருவதற்கான டிக்கெட்டின் விலை லட்சக்கணக்கை தாண்டுகிறது. யோகா பயிற்சி நடக்கிற இடத்தில் கடைசி வரிசையில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப விலை ஆயிரத்திலிருந்து ஆரம்பம். இதன் விலையும் விஷேச நாட்களில் கூடுதலாக இருக்கிறது.
தான் கொடுக்கும் மருந்துகளால் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியும் சர்ச்சையில் சிக்கினார்.
ஊழலுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் இருக்கிற ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடக்கும் போது போலீசார் கைது செய்ய வருகிறார்கள் என்று தெரிந்ததும் சுடிதார் அணிந்து, துப்பட்டாவினால் தலையில் முக்காடிட்டு தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால் இவருடைய தாடி காட்டிக் கொடுத்துவிட்டது இவர் நிறுவிய திவ்யா மருந்தகம் கிட்டத்தட்ட 280க்கும் மேற்பட்ட மருந்துகளையும் பிற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன்மூலமாக ஆண்டுக்கு ஆயிரத்துநூறு கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது.
News Source :tamil.boldsky.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
டிவி நேரலையில் தொகுப்பாளினியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆசாமி
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com