துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்

0
1297
karuna amman comments tamil national alliance members

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளே தற்பொழுது இருப்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். (karuna amman comments tamil national alliance members)

இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டெலோ,புளொட், ஈ பி ஆர் எல் எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகிகள் என்றும், இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம் என்றும், என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை என்றும், கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்த பின்னர் கொழும்பிற்கு தப்பியோடிய கருணா அம்மான்
என்று அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் கொலை, ஆட்கடத்தல், கப்பம் கோரல் போன்றவற்றில் நேரடியாக தொடர்புப்பட்டவரென்று ஜனாதிபதியின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் ரா அத் அல் ஹிசைன் வெளியிட்ட அறிக்கையிலும், இலங்கையில் கடத்தல் சம்பவங்கள்,ஆட்கொலை மற்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், ஆகியனவற்றிற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் நேரடி காரணமாக இருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆசியுடனும், முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதரனாவின் வழிகாட்டலிலும் நடைபெற்ற வெள்ளைவான் கடத்தல் பிரிவுடனும் கருணாம்மான் தொடர்பு வைத்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

அத்துடன், இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் இடங்களை மிகவும் துல்லியமாக காட்டிக்கொடுத்ததும், போரில் விடுதலை புலிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று இராணுவத்திற்கு அறிவுரை வழங்கியதும், விடுதலை புலிகளின் பலம் என்ன, பலவீனம் என்னவென காட்டி கொடுத்ததும் கருணாம்மானே.

மேலும் யுத்தம் முடிவடைந்தவுடன் நந்திக்கடலுக்கு விரைந்து சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் இவர்தான் என்று கட்டிக்கொடுத்தவரும், மொத்தத்தில் தமிழின அழிப்பிற்கான காரணகர்த்தாவாகவும் கருணாம்மான் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags:- karuna amman comments tamil national alliance members

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites