பாரம் தாங்கமுடியாமல் மாட்டிக்கொண்ட கஞ்சா!

0
122
1.5 ton Ganja recovered France Versailles police

திங்கட்கிழமை இரவு Val d’Oise இல் பாரம் தாங்கமுடியாமல் மெதுவாக சென்ற வாகனத்தில் இருந்து 1.5 தொன் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 1.5 ton Ganja recovered France Versailles police

A1 சாலையில் சிறிய ரக வாகனம் ஒன்று அளவுக்கு அதிகமான பாரத்துடன் சென்றுள்ளது. அப்போது குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட Versailles பகுதி காவல்துறையினர், உள்ளே 1.5 தொன்கள் எடையுள்ள கஞ்சா பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். Vémars பகுதியில் வைத்து குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொதியில் ஸ்பெயின் நாட்டில் இருந்து ‘ouvreuse’ என குறிப்பிடப்பட்டு ருமேனியா நாட்டுக்குச் சென்றுகொண்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையில் பொதி பெல்ஜியம் நோக்கி சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

tags :- 1.5 ton Ganja recovered France Versailles police

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**