முடிவுக்கு வந்தது ஜெய் – அஞ்சலி காதல் : பிரிவுக்கு காரணம் இது தானாம்..!

0
55
Jai Anjali love breakup fans shocked,Jai Anjali love breakup fans,Jai Anjali love breakup,Jai Anjali love,Jai Anjali

ஜெய்யும், அஞ்சலியும் படங்களின் தொடர்த் தோல்வி காரணமாக பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.(Jai Anjali love breakup fans shocked)

இத் தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

தமிழில் ”எங்கேயும் எப்போதும்” படத்தில் முதன்முறையாக அஞ்சலியும், ஜெய்யும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, வேறு சில படங்களில் சேர்ந்து நடித்த இருவரும், பின்னர் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர்.

மேலும், ஜோதிகாவின் ”மகளிர் மட்டும்” பட ரிலீசுக்கு முன்னர், அப்படக்குழுவினரின் தோசை சவாலை ஏற்று, ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுத் தருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தன.

இந்நிலையில், திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனக் கூறி புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி.

ஆனால், அஞ்சலி, ஜெய் இருவருக்கும் அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் வண்ணம் படங்கள் வெளியாகவில்லை. இதனால், ஏற்பட்ட மனவேதனையில் இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 17ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு, சமூகவலைத் தளப் பக்கத்தில் ஜெய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்தாண்டு அஞ்சலி பிறந்ததினத்தை முன்னிட்டு ஜெய் தனது சமூகவலைத் தளப் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஞ்சலி, ஜெய் காதல் முறிந்து விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஜெய் நடித்துள்ள ஜருகண்டி விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலியும் அடுத்தடுத்து மூன்று திகில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், இருவரும் இனி தங்களது தொழிலில் மட்டும் அதிக கவனத்தை செலுத்துவது என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

அஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!

Tags :-Jai Anjali love breakup fans shocked

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??