போட்டியின் பின்னர் செனகல் அணி ரசிகர்கள் செய்த காரியம்… : உலகமே பாராட்டுகிறது…!!! (காணொளி)

0
254
Senegal celebrate World Cup CLEAN stadium news Tamil

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரில் போலந்து அணிக்கெதிரான தங்களது முதல் போட்டியில் செனகல் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்திருந்தது.

இதுவரை ஆபிரிக்க அணியொன்றுடன் தோல்வியை தழுவியிருக்காத போலந்து அணி, முதன்முறையாக நேற்று செனகல் அணியிடம் 2-1 என தோல்வியடைந்திருந்தது.

செனகல் அணியின் சார்பில் ஆரம்ப கோல் எதிரணியால் அதிர்ஷடவசமாக வழங்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது கோல் மிகவும் துள்ளியமாக அடிக்கப்பட்டிருந்தது. அத்துடன் செனகல் அணி வீரர்களின் திறமைகளும் பலராலும் பாராட்டப்பட்டு வந்திருந்தது.

இந்நிலையில் வரலாற்று வெற்றியை பெற்ற செனகல் அணியினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தனர்.

செனகல் அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தின் இருந்த போதும், அவர்கள் செய்த செயல் ஒன்று சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றது.

உதைப்பந்தாட்ட போட்டிகளை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருகின்றனர். அதுவும் பிபா உலகக்கிண்ணம் என்றால் சொல்லவே தேவையில்லை.

இப்படி மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் போட்டிகளை பார்த்து ரசிப்பதுடன், தாங்கள் உண்ணும் உணவு கழிவுகள், காகிதங்கள் என பலவிதமான குப்பைகளை மைதானத்தில் வீசிவிட்டு சென்று வீடுகின்றனர். இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களும், ஏனைய ரசிகர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற செனகல் மற்றும் போலந்து அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவடைந்த பின்னர், செனகல் ரசிகர்கள் போட்டியில் வெற்றிபெற்றதையும் தாண்டி, மைதானத்தில் இருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.

இந்த சம்பவமானது ஏனைய ரசிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் செனகல் ரசிகர்கள் பாராட்டப்பட்டும் வருகின்றனர்.

இதேவேளை கொலம்பிய அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற ஜப்பான் அணி ரசிகர்களும் மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

video source SOFOO

https://www.youtube.com/watch?v=AmXoF1mcoug

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Senegal celebrate World Cup CLEAN stadium news Tamil,Senegal celebrate World Cup CLEAN stadium news Tamil, Senegal celebrate World Cup CLEAN stadium news Tamil