இணையத்தில் லீக் ஆன 2.0 காட்சிகள் : பேரதிர்ச்சியில் படக்குழுவினர்..!

0
464
20 movie scene leaked Tamil cinema,20 movie scene leaked Tamil,20 movie scene leaked,20 movie scene,20 movie

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் ”2.0” படத்தின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.(20 movie scene leaked Tamil cinema)

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தொழில்நுட்பக் காட்சிகள் அமைக்கப்பட்டு வருவதால் காலக்கெடு நீண்டுகொண்டே போகிறது.

ஏற்கனவே, ரூ. 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ரூ. 100 கோடி தொழில்நுட்ப பணிகளுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படக்குழுவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தற்காலிகமான முற்றுப்பெறாத கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரஜினி, அக்‌ஷய்குமார் நடித்திருக்கும் சில காட்சிகள் இணையத் தளத்தில் லீக் ஆனது. 44 நொடிகள் ஓடக்கூடிய இக்காட்சிகளை பலர் உடனடியாக சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கின்றனர்.

கடுமையான உழைப்பை செலவிட்டு வருடக்கணக்கில் பணியாற்றி உருவாக்கிவரும் இப்படத்தை யாரோ சிலர் இணைய தளத்தில் லீக் செய்திருப்பதை திரையுலகினர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தனது இணையத் தளப் பக்கத்தில் இதுகுறித்து கோபத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது.. :-

”அதிகாரபூர்வமாக காட்சிகளை வெளியிடுவதற்கு முன்பாக ஆன்லைனில் லீக் செய்திருப்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதை ஊக்கப்படுத்தவும் முடியாது.

பட குழுவினரின் கடுமையான உழைப்பை புறந்தள்ளியிருப்பதுடன் அவர்களது உணர்வுகளையும் பாதிப்புள்ளாக்கியிருக்கும் இதயமற்றவர்களின் செயலாகவே இதை கருத முடிகிறது.

இதற்காக வெட்கப்பட வேண்டும். திருட்டை நிறுத்துங்கள். டிஜிட்டல் மீடியத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என தெரிவித்திருக்கிறார்.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

அஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!

Tags :-20 movie scene leaked Tamil cinema

Our Other Sites News :-

அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??