இலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி

0
113
Two Australians killed road accident expressway Sri Lanka

தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். (Two Australians killed road accident expressway Sri Lanka)

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹஹெதெக்ம வீதிக்கு அருகில் வைத்து கொட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வான் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகினர்.

இதனையடுத்து, நாகொட மற்றும் அல்லிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையான கொலின் லுயிஸ் மொனிக்கா மற்றும் அவரது மகளான நான்கு வயதுடைய கொலின் பொப் கப்ரியேலும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Two Australians killed road accident expressway Sri Lanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites