ஏ9 வீதியில் சினிமா பாணியில் நடந்த விபத்து : பொலிஸ் அதிகாரிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்

0
196
police officer dead jaffna kandy road

அதிவேகமாக பயணித்த கார் ஒன்று, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளை மோதி தூக்கியெறிந்த சம்பவமொன்று கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நில்திய உயன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.(police officer dead jaffna kandy road)

இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் காரில் பயணித்த நான்கு படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தியல் காயமடைந்த நபர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ளதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் மாத்தளை – கித்தலவெல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

tags :- police officer dead jaffna kandy road

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites