சுயாட்சியை வழங்குங்கள் : மைத்திரிடம் நேரடியாக தெரிவித்த சிவி

0
170
cv wigneswaran request Autonomy maithripala sirisena

வடக்கு, கிழக்கில் பகு­தி­களில் வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு சுயாட்சி வழங்க நீங்கள் முன்­வர வேண்டும். அது அர­சியல் ரீதி­யாக உங்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றால் ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் சுயாட்­சியை வழங்­குங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.cv wigneswaran request Autonomy maithripala sirisena

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சிறு­வர்­களை பாது­காப்போம் என்ற தேசிய செயற்­திட்­டத்தின் கிளி­நொச்சி மாவட்ட மாநாடு நேற்று முற்­பகல் கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெற்­றது.
இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு ஜனா­தி­பதி முன்­னி­லையில் உரை­யாற்­றிய போதே வட மாகாண முத­ல­மைச்சர் விக்கினேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

வட­ப­கு­தியில் இடம்­பெற்ற நீண்­ட­கால யுத்­தத்தின் விளை­வாக பல ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தைகள் தாய் தந்­தை­யர்­களை இழந்து, உற­வு­களை இழந்து, குழந்­தைகள் காப்­ப­கங்­க­ளிலும் மற்றும் குழந்­தை­களைப் பரா­ம­ரிக்­கின்ற நல்ல உள்ள படைத்­த­வர்­களின் தனிப்­பட்ட இடங்­க­ளிலும், செஞ்­சோலை போன்ற அமைப்­புக்­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றார்கள். இக் குழந்­தைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். இக்­கு­ழந்­தைகள் பற்றி சிந்­திக்கும் ஒரு சந்­தர்ப்பம் ஜனா­தி­ப­திக்கு ஏற்­பட்­ட­தை­யிட்டு நான் பெரு­ம­கிழ்­வ­டை­கின்றேன்.

யுத்தத்தினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள் யுவ­திகள் உட­லு­றுப்­புக்­களை இழந்து அங்­க­வீ­னர்­க­ளாக எம்­மி­டையே வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வா­றான இளை­ஞர்­க­ளுக்கும் யுவ­தி­க­ளுக்கும் ஏற்ற உதவித் திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என இச்­சந்­தர்ப்­பத்தில் கூறி வைக்க விரும்­பு­கின்றேன்.

போரில் பாதிக்­கப்­பட்டு பல வித நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­களை முன்னாள் போரா­ளிகள் என்ற ஒரே கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானம் ஆகாது. அதுவும் சமய ரீதி­யி­லான பண்­பான குடும்ப வாழ்க்­கையை வாழும் உங்­களைப் போன்­ற­வர்கள் முன்­னைய போரா­ளி­களை அவர்கள் இயக்கப் பெயர் கொண்டு புறந்­தள்ளி வைப்­பது எந்தக் காலத்­திலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்­டாது. அமைச்சர் சுவா­மி­நா­தனின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­யிட்டு நாங்கள் மிகவும் மன­வ­ருத்தம் அடைந்தோம்.

tags :- cv wigneswaran request Autonomy maithripala sirisena

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites