இன்றைய ராசி பலன் 18-06-2018

0
819
Today Horoscope 18-06-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 4ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி,
18.6.18 திங்கட்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மதியம் 2:20 வரை;
அதன் பின் சஷ்டி திதி ஆயில்யம் நட்சத்திரம் காலை 9:34 வரை;
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today Horoscope 18-06-2018 )

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : சிவன், நாகதேவதை வழிபாடு.

மேஷம்:

கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்:

பொது இடங்களில் வீண் பேச்சு வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

மிதுனம்:

சிறு அளவிலான குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல் ஆரோக்கியம் சீராக ஓய்வு அவசியம்.

கடகம்:

தவறாக விமர்சித்தவர் கூட அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சிபெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். குழந்தைகள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்:

நேர்மை எண்ணமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நடைமுறை சிறப்பாக இருக்கும். உபரி வருமானம் உண்டு. குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

கன்னி:

செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகலாம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் அவசியம்.

துலாம்:

செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பும் தேவைப்படும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பிள்ளைகளால் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்:

மன நிறைவுடன் வாழ முற்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

தனுசு:

புதிய முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். வாகன போக்குவரத்தில் கவனம் பின்பற்றுவது நல்லது.

மகரம்:

எதிர்பார்த்த முக்கிய செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை உருவாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெற தேவையான மாற்றம் செயவீர்கள். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கும்பம்:

குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சீர் பெற விடாமுயற்சி தேவைப்படும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் பிறருக்காக பணம், நகை பொறுப்பு ஏற்க வேண்டாம்.

மீனம்:

முன்யோசனையுடன் செயல்பட்டு நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி சிறந்து விளங்கும். கூடுதல் லாபம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 18-06-2018