அமெரிக்கா கிரீன் கார்டு வேண்டுமா? 151 வருடங்கள் காத்திருங்கள்!

0
272
American Green Card Holders Need Wait 151 Years Process

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. எனவே இதை பெற அங்கு வாழும் வெளிநாட்டினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். American Green Card Holders Need Wait 151 Years Process

ஆனால் தற்போது கிரீன் கார்டு வழங்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டு அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கிய கிரீன் கார்டு அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற 151 ஆண்டுகள் ஆகும்.

2018-ம் ஆண்டு எப்ரல் 20-ந் திகதி  நிலவரப்படி 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 இந்தியர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக குறுகிய காலத்தில் இ.பி.-1 குடியேற்ற சான்று வழங்கப்படுகிறது. இதற்கே 6 ஆண்டுகளாகும்.

இளங்கலை பட்டம் பெற்று இ.பி.-3 பட்டியலில் காத்திருப்போர் கிரீன்கார்டு பெற 17 ஆண்டுகள் ஆகும். இந்த பட்டியலில் 54,892 இந்தியர்களும், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என 60,381 பேர் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 273 பேர் உள்ளனர்.

இருந்தபோதிலும் இ.பி.2 பட்டியலில் கிரீன் கார்டு வழங்கப்படாமல் நீண்ட நாட்களாக பலர் காத்திருக்கின்றனர். இவர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்கள். இப்போது கிரீன்கார்டு வழங்கும் விகிதம் அடிப்படையில் இவர்கள் கிரீன்கார்டு பெருவதற்கு 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் கிரீன்கார்டு கிடைக்காமல் அமெரிக்காவிலேயே இவர்கள் இறக்க வேண்டும். அல்லது இந்தியாவுக்கு திரும்ப நேரிடும்.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மேல் கிரீன்கார்டு வழங்க கூடாது என்று உள்ளது. ஆரம்ப நிலையில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 684 பேரும், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் என மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 368 பேர் உள்ளனர்.

மொத்தத்தில் ஆரம்ப நிலையில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 400 பேரும், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 819 பேரும் ஆக மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 219 பேரும் காத்திருக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

பதினான்கு வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தனிமையில் செய்த காமுக வேலை!

நிர்வாணமாய் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை! (படங்கள் இணைப்பு)

இரண்டாயிரம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட கோடிஸ்வரருக்கு இறுதியில் நேர்ந்தது இது தான்!

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்