திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்

0
232
C. V. Vigneswaran no idea start new party

புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்த திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(C. V. Vigneswaran no idea start new party)

“எனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

முதலாவதாக, கட்சி எனக்கு போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், நான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

என் மனதில் அப்படியான எண்ணமில்லை. திட்டவட்டமாக எதுவுமில்லை.

கட்சி எதையாவது தொடங்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை.

ஆனால், அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

tags :- C. V. Vigneswaran no idea start new party

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites