4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை

0
875
tamilnews Passengers requested arrive BIA four hours prior departure

(tamilnews Passengers requested arrive BIA four hours prior departure)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக பயண ஏற்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான தாமதங்களை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு விமானப் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் 4 மணித்தியாலங்கள் முன்கூட்டியே விமான நிலைய கரும பீடங்களுக்கு சமூகமளிக்குமாறு ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் கோரியுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வௌியேறும் மார்க்கத்தை அண்மித்த பகுதியில் குறித்த திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக, பயணிகள் தமது பயணத்தை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக விமான நிறுவனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை www.srilankan.com என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் 1979 என்ற சிறப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என ஶ்ரீ லங்கன் விமான சேவ நிறுவனம் அறிவித்துள்ளது.

(tamilnews Passengers requested arrive BIA four hours prior departure)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites