ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்‌ஷ வருத்தம்

0
667
tamilnews mahinda rajapaksha worry ghanasara thero jailed

(tamilnews mahinda rajapaksha worry ghanasara thero jailed)

இலங்கையின் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என அவர் கூறினார்.

அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதி மற்றும் ருவான்வெலிசேய அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

பொலிஸாரை கொண்டு பாதாள குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் தியானத்தில் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

பாதாள உலகக் குழுக்களை அடக்கும் நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு, அரசாங்கம் தன்னை விரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அரசாங்கம் வேண்டும் என்றே ஞானசார தேரரை சிறையில் அடைத்துள்ளது.

இது தொடர்பாக மெதகொட தேரர் வௌியிட்ட கருத்து உண்மையானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews mahinda rajapaksha worry ghanasara thero jailed)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites