மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!

0
1039
fifa world cup 2018 latest sports news Tamil

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதல் முறையாக ஆர்ஜன்டீனா, பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகள் இணைந்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளன.

பிபா உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் ஆர்ஜன்டீனா, பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகள் இணைந்து தங்களது முதல் போட்டியில் வெற்றிப்பெறத் தவறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பிபா உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் முக்கிய அணிகளாக பிரேசில், ஆர்ஜன்டீனா மற்றும் ஜேர்மனி அணிகள் உலகளாவிய ரீதியில் பார்க்கப்படுகின்றன.

உலகக்கிண்ணத்தை பிரேசில் அணி 5 தடவை கைப்பற்றியுள்ளதுடன், ஜேர்மனி 4 தடவைகளும், ஆர்ஜன்டீனா 3 தடவைகளும் கைப்பற்றியுள்ளன.

இப்படி இருக்கையில் இந்த அணிகள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது. எனினும் இம்முறை குறித்த மூன்று அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை தவறவிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக வழங்கியுள்ளது.

குறித்த அணிகள் தனித்தனியாக உலகக்கிண்ண போட்டிகளில் தோல்வியடைந்திருந்த சந்தர்ப்பங்கள் ஏற்கனவே இருந்தாலும், மூன்று அணிகளும் ஒரே தடவையில் தோல்வியடைந்த முதல் சந்தரப்பம் இதுவாகும்.

ஜேர்மனி அணி தங்களது முதல் போட்டியில் மெக்ஸிகோவிடம் 0-1 என தோல்வியடைந்திருந்த நிலையில், ஆர்ஜன்டீன அணி, ஐஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியை 1-1 என சமப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பிரேசில் அணி, சுவிஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியை 1-1 என சமப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

fifa world cup 2018 latest sports news Tamil, fifa world cup 2018 latest sports news Tamil