டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

0
325
delli minister hospital, india tamil news, india news, india, delli minister,

{ delli minister hospital }

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் சத்யேந்திர குமார், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் சத்யேந்திர குமார் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது குடும்பத்தின் அங்கம் என்றும், அவர்கள் உடனடியாக பணியை தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக முதலமைச்சருக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

Tags: delli minister hospital

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் ​உயிருடன் இருக்கிறாரா?

*அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!

*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!

*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com
*Tamilgossip.com
*Tamiltechno.com
*tamilfood.com