ஐரோப்பியாவின் பலம் மிக்க அணிகளின் மோதல் : காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
851
portugal vs spain world cup 2018

சர்வதேச உதைப்பந்தாட்ட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாக பிபா உலகக்கிண்ண முதல் போட்டியில் ரஷ்ய அணி, சவூதி அரேபிய அணியை 5-0 என வெற்றிக்கொண்டது.

இந்நிலையில் இன்று பிபா உலகக்கிண்ணத்தின் மூன்று லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இதில் முக்கியமாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

உதைப்பந்தாட்ட வரலாற்றை பொருத்தவரையில் பலம் மிக்க அணிகளாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் ஆகிய அணிகள் பார்க்கப்படுகின்றன.

ஸ்பெயின் கடந்த 2010ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும், இம்முறை களமிறங்கும் அணிகளில் போர்த்துகல் ஸ்பெயினை விட பலம் மிக்க அணியாக வர்ணிக்கப்படுகின்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இருக்கும் வரலாறு முற்றுமுழுதாக ஸ்பெயின் அணியை பலம் மிக்கதாக காட்டுகின்றது. இரு அணிகளும் உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் ஒரு தடவை மாத்திரமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

2010ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் போது, இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, போர்த்துகல் அணியை எதிர்கொண்ட ஸ்பெயின் அணி 1-0 என வெற்றிபெற்றதுடன், குறித்த ஆண்டில் உலகக்கிண்ணத்தையும் கைப்பற்றியது.

அத்துடன் இரண்டு அணிகளுக்கும் இடையில் மொத்தமாக 35 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் 16 போட்டிகளில் ஸ்பெயின் அணியும், 6 போட்டிகளில் மதாத்திரமே போர்த்துகல் வெற்றிபெற்றுள்ளது.

எனினும் ஸ்பெயின் அணியின் உலகக்கிண்ண போட்டி ஆரம்பிக்க இரண்டு நாட்கள் மாத்திரமே இருந்த நிலையில், அவர்களது பயிற்றுவிப்பாளரான ஜூலியன் லோபெட்டிகுயை நீக்கி, அவருக்கு பதிலாக பெர்னாண்டோ ஹெய்ரோவை நியமித்துள்ளது.

இந்த மாற்றமானது ஸ்பெயின் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உதைப்பந்தாட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை போர்த்துகல் அணியை பொருத்தவரையில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் சம்பியனாகியுள்ளது. அத்துடன் ரொனால்டோ மற்றும் அன்ரே சில்வா ஆகிய முன்னணி வீரர்களை அணியில் கொண்டுள்ளதுடன், அனுபவ வீரர்களுடன் அணியை உலகக்கிண்ணத்துக்கு அழைத்து வந்துள்ளது.

ஸ்பெயினை பொருத்தவரையில் இளம் வீரர்களை அணியில் கொண்டு களமிறங்குகின்றது. அத்துடன் அனுபவம் குறைந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். புதிய அனுபவம். மிகப்பெரிய போட்டித் தொடர். இதனை எப்படி ஸ்பெயின் கையாலப்போகின்றது என்பதே எல்லொருடைய எதிர்ப்பார்ப்பும்…

இன்றைய போட்டியானது இலங்கை நேரப்படி 11.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், இதற்கு முன்னர் எகிப்து -உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியும், மொராக்கோ – ஈரான் அணிகளுக்கிடையிலான போட்டிகளும் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>

portugal vs spain world cup 2018, portugal vs spain world cup 2018