பயணிகளுக்காக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மோதல்!

0
344
clash drivers conductors stopped parked passengers

சேலத்தில் 2 தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியில், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மோதிக் கொண்டனர்.clash drivers conductors stopped parked passengers

இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஜங்ஷனுக்கு புறப்பட்ட எஸ்.வி.டி பேருந்தும், கன்னங்குறிச்சிக்கு புறப்பட்ட செம்மீன் என்ற பேருந்தும், அஸ்தம்பட்டி ரவுண்டானா வரையிலான 5 நிறுத்தங்களில் பயணிகளை ஏற்ற போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின. அஸ்தம்பட்டி ரவுண்டானா வந்தபோது, 2 பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

மேலும் முக்கிய பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு அரங்கேறிய மோதலால், வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசஸார், 2 பேருந்துகளின் ஊழியர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :