சர்வதேச பரப்பில் விலகும் புலிகள் மீதான பயங்கரவாத திரைக்கு பின்னால் காத்திருக்கும் நீதி!

0
693
Swiss Court Judgement Says LTTE Libarels Not Criminals

விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகளை சர்வதேச அரங்கில் பயங்கரவாதிகளாக சித்தரிக்க இலங்கையில் காலம் காலமாக பேரினவாத அரசுக்கள் முன்னெடுத்து வந்த நடவடிக்கைகள் அளப்பரியது. Swiss Court Judgement Says LTTE Libarels Not Criminals

போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலப்பகுதியில் சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்திருந்த தமிழ் மக்களிடம் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளையும் , சர்வதேச ரீதியில் புலிகளுக்கான ஆயுத விநியோகத்தை தடை செய்யவும் புலிகளை பயங்கரவாதிகளாக்கி அவர்களை உலக நாடுகள் தடை செய்யவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு தள்ளப்பட்டிருந்தது.

பேரினவாத அரசின் திட்டத்துக்கு தமிழின துரோகிகளே கைகொடுத்த துர்ப்பாக்கிய நிலையின் பின்னணியில் பல நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்து கொண்டன.

புலிகள் அமைப்பின் மீது திணிக்கப்பட்ட தடையினால் பல வழிகளில் எமது போராட்டம் பெரும் பின்னடைவுகளை சந்தித்தது.

அது மட்டுமன்றி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பு செய்தவர்கள் இந்த தடை மூலம் பல நாடுகளில் பலவிதமான சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர்.

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை புலிகள் அமைப்பின் மீதான தடையை பாவித்து அங்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நபர்கள் மீது பல விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப் போரட்டத்தை குற்றவியலாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரித்து அடக்குவதற்கு 2000 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைக்கு முண்டுகொடுத்துச் செயற்படும் வல்லாதிக்க சக்திகள் சுவிஸ் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தன.

இதன் காரணமாக 2005 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் முனைப்புப் பெற்ற இந்தச் சட்ட நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டு வலுப்பெற்று சுவிஸின் வரலாற்றில் இதுவரையும் இடம்பெற்றிராத மாபெரும் வழக்காக பெரும் செலவில் இடம்பெற்றது.

இந்த நிலையில், 08.01.2018 அன்று சுவிஸ் நாட்டில், பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு எனும் குற்றச்சாட்டோடு, 13 பேர் மீது வழக்கு ஆரம்பமானது.

இந்த 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அந்தக் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சுவிஸ் நாட்டின் ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும் இந்த வழக்கு ஒரு பிரதான செய்தியாக அமைந்திருந்தது.

இருப்பினும் இந்த வழக்கின் ஆழம் மிகப்பெரியது. இதனால் இந்த வழக்கையும் நேற்று வெளியான தீர்ப்பையும் மேலோட்டமாகப் பார்க்காமல் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஊடகங்களும், அரசியற் செயற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் உள்ளனர்.

பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு

20.07.2016 அன்று சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனத்தின் இணையத்தளத்தில், 13 நபர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நபர்கள் மீது, ஒரு குற்றவியல் அமைப்பின் அங்கத்துவம், ஒரு குற்றவியல் அமைப்புக்கான உதவி, நிதி மோசடி, பத்திர மோசடி மற்றும் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இத்தோடு, விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய நிதி உதவியினால் யுத்தம் இன்னும் கொடூரமாகவும், நீண்ட காலமாகவும் நடைபெற்றது என்றும் அக்குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஒப்பானதொன்றாகவும், தமிழினவழிப்பை நியாயப்படுத்தும் ஒரு மோசமான விடயமாகவும் காணப்பட்டது.

இவற்றுக்கும் அப்பால் இந்த வழக்கின் பிரதான கேள்வியாகப் பார்க்கப்படும் விடயம் என்னவெனில், ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பா?’ என்பதாகும்.
சுவிஸ் நாட்டின் மத்திய அரசின் வழக்கறிஞர் சம்மேளனம், இதனை பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு எனக் கருதுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்திருந்தது.

இந்தக் கேள்விக்கான பதிலை, அவ்வழக்கின் நீதிபதிகள் சட்ட வல்லுநர்களின் உதவியோடும் வரலாற்று வல்லுநர்களின் உதவியோடும் இன்று வழங்கினர்.

கிளர்ச்சி முறியடிப்புச் சூழலும் இந்த வழக்கும்

COIN (Counter-insurgency) என்றழைக்கப்படும் கிளர்ச்சி முறியடிப்புத் திட்டம், வெறும் இராணுவ விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையல்ல.

ஏனெனில், கிளர்ச்சி முறியடிப்பு என்பது ஆயுதம் தரித்த கிளர்ச்சியாளர்களைக் கொல்வது மட்டுமின்றி, அக்கிளர்ச்சியூடாக உருவான அரசியல் வெற்றிடத்தை அழித்தலே ஆகும்.
அதன் அடிப்படையிலேயே 2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேர்த்து, அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசும் அழிக்கப்பட்டது.

ஏனெனில் இலங்கை அரசின், ‘அரசியல், நிர்வாக மற்றும் ஆயுத ஏகபோகங்களை’ முறியடித்து, தமிழீழ நடைமுறை அரசு நிறுவப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் இருந்த தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, தமிழரின் தாயகத்தில் இலங்கை அரசின் ஏகபோகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

ஆனால், 2009ம் ஆண்டின் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நிலவுகின்ற தாயகக் கோட்பட்டை அழிக்க முடியவில்லை.

அதனால் தான், புலம்பெயர்ந்த தமிழர்களின் மீதும் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வேலைத் திட்டங்களுக்குள் இந்த வழக்கும் அடங்குகின்றது.

சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

24.12.2000 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். மூன்று தடவைகள் இதன் கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் இதற்கு ஓர் தகுந்த பதிலை அளிக்கவில்லை.

கட்டுநாயக்க மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னரே, ஸ்ரீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்தத்துக்குத் தகுந்த பதிலை அளித்தது.

தமிழர் தரப்பின் முயற்சியாலேயே, யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து, அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

‘இந்தத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவிப்பது ஒரு பிழையான முடிவு. ஏனெனில், சமாதான நடவடிக்கைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதால், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பாக அறிவித்தல் ஒருதலைப் பட்சமானதாக அமைந்துவிடும்,’ என்று 2005ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் வழக்கறிஞர் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

ஆனால், Washington நகரில் நடைபெற்ற மகாநாட்டில் தமிழர்களைப் புறக்கணித்து, சுனாமி கட்டுமானத்தை நிலைகுலைய வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையினைக் கொண்டுவந்து, இப் பேச்சுவார்த்தை முறிவுபெற்றது.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் இந்திய, அமெரிக்க வல்லாதிக்கங்கள் இருந்தன. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததுடன், 2008ம் ஆண்டு ஸ்ரீலங்கா போர்நிறுத்தத்திலிருந்து விலகியது. இதன் பின்னரே, 2009 ஆம் ஆண்டில் யுத்தம் உக்கிரமடைந்து முடிவுபெற்றது.

பேச்சுவார்த்தையை வெளிப்படையாகச் சக்திகள் தடுத்த போதும், திட்டமிட்ட வகையில் தமிழர்கள் அழிக்கப்பட்ட போதும், சுவிஸ் மௌனம் காத்தது.

இந்த நிலையில், இன்றைய வரலாற்றுத் தீர்ப்பை அறிவித்த சுவிசின் உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல் வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி தீர்ப்பளித்துள்ளார்.

காலம் தாழ்த்தப்பட்டு கிடைத்த நீதி என்றாலும் , சத்திய தர்மங்களை தனக்குள் உள்வாங்கி கொண்டு நடைபோட்ட போராட்டத்தின் உண்மை தன்மை கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளால் விளங்கி கொள்ளப்படுகின்றமை புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைத்த பெரு வெற்றி என்றே கூறவேண்டும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு