(Mahinda choose suitable presidential candidate Gotabaya)
தலைவர் என்ற வகையில் பொது மக்களின் அபிலாஷைகளையும், எண்ணங்களையும் புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொருத்தமான அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த தெரிவு செய்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனையில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கோட்டாபய ராஜபக்ஷ இந்த கருத்துக்களை வௌியிட்டார்.
நாட்டின் பொதுப்படை தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பதாகவும், தோல்வியின் அடிப்படையிலான எதிர் சக்திகள் கூட தமது தவறை உணர்ந்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் பெயரிடும் எவரேனும் ஒருவர் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.
கண்டி, தலதா மாளிகையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே இந்த கருத்தை வௌியிட்டார்.
(Mahinda choose suitable presidential candidate Gotabaya)
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!