பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த தெரிவு செய்வார் – கோட்டாபய

0
225
Mahinda choose suitable presidential candidate Gotabaya

(Mahinda choose suitable presidential candidate Gotabaya)

தலைவர் என்ற வகையில் பொது மக்களின் அபிலாஷைகளையும், எண்ணங்களையும் புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ செயற்படுவார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொருத்தமான அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த தெரிவு செய்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனையில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

நாட்டின் பொதுப்படை தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பதாகவும், தோல்வியின் அடிப்படையிலான எதிர் சக்திகள் கூட தமது தவறை உணர்ந்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ சரியான நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் பெயரிடும் எவரேனும் ஒருவர் போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

கண்டி, தலதா மாளிகையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே இந்த கருத்தை வௌியிட்டார்.

(Mahinda choose suitable presidential candidate Gotabaya)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites