20 அடி பனை மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் தற்கொலை!

0
678
20 feet falling palm person commits suicide

20 அடி உயரப் பனை மரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யாழ். உடுப்பிட்டியைச் சேர்ந்த 53 வயது நபரொருவர் சிகிச்சை பலனளிக்காது நேற்றைய தினம் ( 14) உயிரிழந்துள்ளார். (20 feet falling palm person commits suicide)

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்று முன்தினம் புதன்கிழமை(13) தனது வீட்டுக்கு அருகிலுள்ள 20 அடி பனைமரத்தில் ஏறி அதிலிருந்து குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பனைமரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த குறித்த நபர் அவரது உறவினர்களால் காப்பாற்றப்பட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ் – போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் முன்னரும் பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

யாழ். உடுப்பிட்டி இமையாணன் பகுதியைச் சேர்ந்த சின்னையா அன்பரசு ( வயது-53) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- 20 feet falling palm person commits suicide
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites