தனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்!

0
337
mother kill herr 2 children Limonest France

பிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France

இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை காவல்துறையினருக்கு குறித்த இரு சிறுமிகளின் தாயார் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் நான்கு மற்றும் ஆறு வயதுடைய சிறுமிகளை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் மிக அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆனால் கொலை செய்யப்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த சிறுமிகளின் தந்தை ஒரு ஜோந்தாம் அதிகாரி எனவும், அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**