முன்னணி வீரர்களுடன் பங்களதேஷ் செல்லும் இலங்கை!!! : தலைவராக திமுத்!

0
166
Sri Lanka squad vs Bangladesh tour 2018 news Tamil

பங்களாதேஷ் ஏ அணியுடன் நடைபெறவுள்ள மூன்று நான்கு நாள் போட்டிக்கான இலங்கை ஏ அணியின் தலைராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணி மூன்று நான்கு நாள் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்க பங்களாதேஷ் செல்கின்றது.

இந்த தொடரில் நடைபெறவுள்ள நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தின் பெயர் விபரங்களை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த மே.மாதம் இடம்பெற்ற பயிற்சியின் போது, ஆள்காட்டி விரல் உபாதைக்கு உள்ளாகிய திமுத் கருணாரத்ன மே.தீவுகள் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும் உபாதையிலிருந்து மீண்டுள்ள அவர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளார்.

இதன்படி பங்களாதேஷ் ஏ அணிக்கெதிரான நான்கு நாள் போட்டித் தொடரின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதால், கருணாரத்ன முதலிரண்டு நான்கு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அணிக்குழாமில் இலங்கை தேசிய அணியில் விளையாடிய தசுன் சானக, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்னே, லக்ஷான் சந்தகன், தனுஷ்க குணதிலக மற்றும் செஹான் மதுசங்க ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விபரம்

திமுத் கருணாரத்ன (முதலிரண்டு போட்டிகளுக்கான தலைவர்), தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்னே, அசான் பிரியஞ்சன், சரித் அசலங்க, தசுன் சானக, சம்மு அசான், மனோஜ் சரத்சந்ர, பிரபாத் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், நிஷான் பீரிஸ், செஹான் மதுசங்க, நிசால தாரக, திலேஷ் குணரத்ன

<<Tamil News Group websites>>

Sri Lanka squad vs Bangladesh tour 2018 news Tamil, Sri Lanka squad vs Bangladesh tour 2018 news Tamil