ஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா?

0
964
6 unp members take oath today

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.(6 unp members take oath today)

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இவர்களின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிகார, புத்திக பத்திரன, அஜித் மன்னம்பெரும, எட்வேர்ட் குணசேகர, லக்கி ஜெயவர்த்தன, நளின் பண்டார ஆகியோரே பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடந்த பேச்சுக்களின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும், ரவி கருணாநாயக்கவுக்கு இன்று அமைச்சர் பதவி வழங்கப்படுவது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

tags :- 6 unp members take oath today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites