சந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு

0
500
sandaruwan maithripala sirisena

லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.(sandaruwan maithripala sirisena)

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றில் வெளியான இந்தச் செய்தி பொய்யானது என்றும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசுடனான சந்திப்பு மற்றும், லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துவது அல்லது கைது செய்வது பற்றி வெளியான செய்திகள் பொய்யானது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள லங்கா இ நியூஸ் இணையத்தளம், தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதனால் லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துவது அல்லது கைது செய்ய கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- sandaruwan maithripala sirisena

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites