கோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்

0
566
gotabaya rajapaksa usa

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷ களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார். (gotabaya rajapaksa usa)

இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று முன்தினம் இரவு மஹிந்த ராஜபக்ஷவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்த ரகிசிய சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ எந்த கருத்தையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கவில்லை.
இந்நிலையிலேயே இது தொடர்பாக நம்பகமான வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போதே, மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறினார் என்று அறியப்படுகிறது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்த நிலைப்பாடு, ராஜபக்ஷ குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tags :- gotabaya rajapaksa usa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites