மாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….

0
847
Chinese Woman Missing Sydney

காணாமல் போயுள்ள சீனப் பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. Chinese Woman Missing Sydney

கி யூ, என்ற 28 வயதான குறித்த பெண் சிட்னியில் வசித்து வந்தவர்.

அவர் காணாமல் போய் நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது கார் அவரது இல்லத்திலிருந்து 4 கிலோ மீற்றர்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பான நிபுணர்கள் குறித்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை லொச் ஸ்ட்ரீட்டில் உள்ள அவரது வீட்டின் அருகில் காணப்பட்டுள்ளார்.

மேலும் காணாமல் போவதற்கு முதல் நாள் சீனாவில் உள்ள அவரது குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் அவர் காணாமல் போயுள்ளார். நண்பர்கள் வந்து பார்க்கும்போது அவர் அங்கிருக்கவில்லை.

இதன்போது மாய்மாகியிருந்த அவரது வெள்ளைநிற டொயாட்டோ கொரோலோ , அவரது வீட்டிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில், பேர்வுட் ஸ்ட்ரீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தகவல் எதுவும் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.