தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார் நடிகர் மோகன்லால்…

0
489
Actor Mohanlal leader post

(Actor Mohanlal leader post )

நடிகர் மோகன்லால் மலையாளத் திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்கத்தலைவராக பதவியில் இருந்து வரும் இன்னசெண்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . இவர் பதவியேற்ற நாள் தொடங்கி இன்றுவரை நடிகர் நடிகைகளின் பல்வேறு பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இன்னசென்ட் திறமையாகக் கையாண்டு நடிகர் சங்கத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தனது முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார்.

இதையடுத்து மலையாள நடிகர் சங்கத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மோகன்லால் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து விரைவில் கேரள நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.  இந்தக் கூட்டத்தில் நடிகர் மோகன்லால் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

tags;-Actor Mohanlal leader post

MORE TAMIL NEWS

கமலஹாசன்! தொகுப்பாளரா? அரசியல்வாதியா? : பிக்பாஸ்-2!
பெ.மணியரசன் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!
கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com
*Tamilgossip.com
*Tamiltechno.com
*tamilfood.com