(tamilnews Easwary Rao entry Kaala Tamil cinema 12 years break)
சுமார் 12 வருட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ்.
குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார் ஈஸ்வரி.
அவருடன் நடத்திய பிரத்யேக நேர்காணல் உங்களுக்காக!
கேள்வி: காலா படத்தில் இடம்பெற்றுள்ள உங்களின் கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எப்படி பார்க்குறீங்க?.
பதில்: ஹா ஹா ஹா… என்னால நம்ப முடியல… ஏன்னா 13 வருடங்களுக்கு பின்னாடி எனக்கு ஒரு ப்ரேக் கிடைச்சிருக்கு, ரொம்ப சர்ப்ரைசா இருக்கு.
அதேசமயம், என்னால நம்பவே முடியல.. நான் இதுவரைக்கும் மூன்று முறை தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன், ரசிகர்கள் கொண்டாடுறாங்க.
செல்வி கதாபாத்திரம் வந்தாலே கைத்தட்டுறாங்க. மேலும், அவர்களுடைய வீட்டுக்கு வரணும்னு சொல்றாங்க.
இது எனக்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.
கே: காலா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
ப: நான் கண்டிப்பா இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஊடகங்களும் என்னை மிகவும் பாராட்டுகின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
கே: இந்த பாராட்டுகள் உங்களுடைய நடிப்புக்கு கிடைக்கிறது என்று நினைக்கிறீங்களா, இல்லை ரஜினிகாந்தின் படத்தில் நல்லா நடித்ததால் இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது என்று நினைக்குறீர்களா?
ப: கண்டிப்பாக, இது சூப்பர் ஸ்டார் படம், அதுதான் முதல் காரணம். சூப்பர் ஸ்டார் படம் என்பதால்தான் எனக்கு இவ்வளவு பாராட்டுகள் குவிந்திருக்கு.
நான் நடிச்சிருக்கேன், ஆனா சாதிச்சிட்டேன்னு சொல்லமுடியாது. அதை ரசிகர்கள்தான் சொல்லணும்.
கே: ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு உங்கள் கதாபாத்திரம் பற்றி ஏதாவது சொன்னாரா?
ப: ரஜினிகாந்த் சார் இரண்டு முறை நான் படம் பார்த்துவிட்டேன், உன்னுடைய நடிப்பு பிரமாதமாக உள்ளது.
நீ ஸ்கோர் பண்ணிட்டனு சொன்னாங்க. அப்போது நான் மகிழ்ச்சியாகவும், அதேசமயம் ஒரு விருது கிடைத்தது போலவும் உணர்ந்தேன்.
கே: காலாவில் இடம்பெற்றுள்ள செல்வி கதாபாத்திரம் உங்களுடைய சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடிக்குமா?
ப: நிச்சயம். ஈஸ்வரி ராவ் என்பவரின் வாழ்கையில் காலா முக்கியமானது. என்னுடைய சினிமா வரலாற்றில் அதிக முக்கியத்துவம் காலாவுக்கும் செல்வி கதாபாத்திரத்திற்கும்தான் இருக்கும்.
கே: ரஞ்சித்தின் இயக்கம் குறித்து உங்களுடைய பார்வை?
ப: இந்த படத்தில் நான் நடிப்பதற்கு ரஞ்சித்தான் முக்கிய காரணம். இந்த ரோலுக்கு நான் சரியாக இருப்பேன் என்று தேர்வு செய்து, செல்வி தோற்றத்துக்கான கெட் அப் அவருக்கு திருப்தியாக இருந்த பிறகுதான் சூப்பர் ஸ்டாரிடம் கூறி ஓகே வாங்கினார்.
கே: இந்த 13 வருடம் நீங்கள் சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?
ப: இல்லை. ஏன்னா வாய்ப்பு வரட்டுன்னு என காத்திருந்தேன். அதோடு என்னுடைய குடும்ப வேலைகளை பார்த்துக் கொண்டிருந்ததால் அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
கே: ரஜினிகாந்த் காலா படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்த போதுதான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார்.
அவர் கட்சி தொடங்குவது குறித்து உங்களுடைய கருத்து என்ன? அவர் கட்சி ஆரம்பித்தால் அதில் சேர்ந்துக்கொள்வீர்களா?
ப: எனக்கு அரசியல் தெரியாது. இருந்தாலும் சினிமா வேறு, அரசியல் வேறு. இன்னைக்கு ரஜினி சாரும், கமல் சாரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வருகிறார்கள்.
நல்ல நோக்கத்துடன் வருபவர்களை ஆதரிக்க வேண்டும். பொது மக்களாக சாதாரண மனிதரா இருந்து பார்க்கும் போது இப்ப அரசு மோசமான வழியில் சென்றுக்கொண்டிருக்கிறது.
அதையெல்லாம் இவங்க ரெண்டு பேருமே சரி செய்வோம்னு சொல்றாங்க. அதுல யார் சிறப்பா செயல்படுறாங்களோ அவங்களை மக்கள் தேர்வு செய்வாங்க.
என்ன பொருத்த வரைக்கும் மக்களில் ஒருவராதான் வரேனு ரஜினி சாரும், கமல் சாரும் சொல்றாங்க. ரெண்டுபேரையுமே நாம வரவேற்கனும்.
கே: மாற்றத்தை இவர்களால் கொண்டு வர முடியும் என்று நினைக்குறீங்களா?
ப: அரசு இப்போது சென்றுக்கொண்டிருக்கும் நிலையை பார்த்துதான் இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். இவர்கள் நினைத்திருந்தால், அரசியலுக்கு 20, 30 வருடங்களுக்கு முன்பே வந்திருக்கலாம்.
ஆனால் வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் இப்போது வருகிறார்கள். நிச்சயம் இருவருமே நல்லது செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஒரு மாற்றம் வரட்டுமே.
‘காலா’ படத்தை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது
“நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?”: காலா இயக்குனர் ரஞ்சித்
கே: தென்னிந்திய சினிமாக்களில் வட இந்திய பெண்கள் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இதற்கு காரணம் இங்கு இருக்கும் பெண்கள் நடிக்க முன்வரவில்லையா? அல்லது இயக்குனர்கள் வட இந்திய பெண்களை நடிக்க வைக்க நினைக்கிறார்களா? இந்த நிலையை எப்படி பாக்குறீங்க?
ப: ஒரு காலத்தில் நம்முடைய ஹீரோயின்கள் வைஜெயந்திமாலா முதல் ஸ்ரீதேவி வரை வட இந்திய சினிமாவை ஆட்சி செய்தனர். ஏன்னா நடிப்பு என்பது திறமை சம்பந்தப்பட்டது.
.
தென்னிந்திய சினிமாவிலும் வட இந்திய சினிமாவிலும் அவர்கள் ஆட்சி செய்தனார்.
ஆனால் இப்போது ஜெனரேஷன் மாறிவிட்டது, எல்லாமே கமர்ஷியல் ஆகிவிட்டது. இப்ப ஒரு பெண் வெள்ளையா இருக்காலா இல்லையா? துணி கம்மியா போடுவாளா இல்லையா? என்பதுதான் பார்க்கப்படுகிறது.
இன்று அதுதான் வேண்டும் என்று ஆகிவிட்டது. இதற்கு நம் பெண்கள் செட்டாக மாட்டார்கள். இதனால் வட இந்தியா சென்று ஹீரோயின்காளை செலக்ட் பண்ணிட்டு வர்றாங்க. அவங்க எந்த துணி கொடுத்தாலும் போட்டுக்கிறாங்க.
ஈசியா இருக்குனு நினைக்கிறாங்க. கடைசி 20 வருடம் அவங்கதான் இங்க வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. நம்ம பொண்ணுங்களும் இருக்காங்க. நயன்தாரா, நித்யாமேனன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் எல்லோரும் இருக்காங்க.
தென்னிந்தியாவுல இருந்து நூறு பேர் வர்றாங்கனா, அதுல 10 பேர்தான் செலக்ட் பண்றாங்க. தேர்வு செய்றதுலதான் தப்பு இருக்கு. தப்பி தவறி நயன்தாரா இந்த போட்டியெல்லாம் கடந்து வெற்றிபெற்றிருக்காங்க இன்னும் நம்பர் ஒன்னா இருக்காங்க. அவங்கள நினைச்சு தென்னிந்திய நடிகைகள் பெருமைப்படணும்.
கே: இதற்கு அப்புறம் என்ன திட்டம்? நிறைய படங்கள் பண்ணனும்னு எண்ணம் இருக்கா? வாய்ப்புகள் எப்படி வந்துக்கிட்டு இருக்கு உங்களுக்கு?
ப: நான் எப்பவும் செலக்டான படங்கள் பண்ணனும்னுதான் நினைப்பேன். இப்பகூட நான்கு கதைகள் வந்துச்சு. ஆனா, பாலா சார் இயக்கும் வர்மா படத்தை மட்டும் தேர்வு செஞ்சு நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதிகம் படம் நடிப்பதை விட நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்குறேன்.
(tamilnews Easwary Rao entry Kaala Tamil cinema 12 years break)
MOST RELATED CINEMA NEWS
* நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!
* துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!
* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!
* இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!
* தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!
* ‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!
* நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!
* இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!
Tags :-Kaala Movie Review Tamil Cinema
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com