கிம்மை தொடர்ந்து ட்ரம்பும் விஜயம் – உச்சி மாநாட்டுக்கு சிங்கப்பூர் தயார்

0
548
tamilnews american north Korean bilateral talks Singapore

(tamilnews american north Korean bilateral talks Singapore)

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நாளை மறுதினம் (12) நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூருக்கு சென்றடைந்துள்ளார்.

முன்னதாக, வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இன்று (ஞாயிற்றுகிழமை) காலையே சிங்கப்பூர் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாட்டு தலைவர்களும் சிறிது தூரத்திலுள்ள வெவ்வேறு விருந்தகங்களில் தங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமரிடம் பேசிய கிம் ஜாங்-உன் “உலகமே இங்கு நடப்பதை உற்றுநோக்குகிறது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

“அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது” என்று முன்னதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்

டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

இந்தநிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சிங்கப்பூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.

அமெரிக்கா – வட கொரியா பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுவாயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.

கடந்த 18 மாதங்களாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.

முன்னதாக, சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.

(tamilnews american north Korean bilateral talks Singapore)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites