கனடாவில் கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அனுமதி – கனடாவாசிகளின் கருத்து என்ன?

0
715
huge milestone occurred effort legalize recreational marijuana Canada

(huge milestone occurred effort legalize recreational marijuana Canada)

கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் ஏற்கனவே அனுமதியுள்ளது.

இந்த நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது.

அதேபோல், ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால், கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம்.

Image result for canada cannabis

புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும்.

மதுபானசாலைகளில் கஞ்சாவை உரிய அனுமதியுடன் பயன்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.

போதைப் பொருட்களில் முக்கியமானதாக கஞ்சா கருதப்படுகிறது.

மருத்துவப் பயன்பாடுகளுக்காக தொடங்கப்பட்ட கஞ்சா, நாளடைவில் அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது.

அதன் ஆபத்தை அறிந்து, சில நாடுகள் அதற்கு தடை விதித்தன.

Image result for canada cannabis

இருப்பினும் சில நாடுகளில் முறையான அனுமதி பெற்று, பயன்பாட்டில் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள மதுபானசாலைகளில் குறிப்பிட்ட அளவு மட்டும் பயன்படுத்த அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கஞ்சா தடை செய்யப்பட்ட பொருளாக உள்ளது.

இந்த நிலையில் கனடாவில் உள்ள மதுபானசாலைகளில் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கஞ்சாவை பயன்படுத்த சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கேமரோன் அஹமது, கஞ்சாவை அதிகாரப்பூர்வமாக்கும் சட்டம் அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்றும், அதன்படி குறிப்பிட்ட அளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related image

புதிய விதிமுறைகளின்படி, கஞ்சாவை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 19 என்றும், ஒரு நபருக்கு 30 கிராம் வரை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜி-7 நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடாக கனடா திகழவுள்ளது.

கனடாவில், கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது.

எனினும், போதைப் பொருளாக அதனைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் அந்த நாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக கள்ளச் சந்தையில் கஞ்சா தாராளமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

Image result for canada cannabis

இந்தச் சூழலில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, 18 வயதுக்குள்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான திருத்தத்தை கஞ்சா தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து, மேலவையில் அந்த மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 30 வாக்குகளும் பதிவாகி, அந்த சட்டமூலம் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, மீண்டும் நாடாளுமன்ற கீழவையில் சட்டமூலம் தாக்கல் செய்யப்படும்.

Image result for canada cannabis

அங்கு அந்த மசோதா எளிதில் அங்கீகரிக்கப்பட்டு, கனடாவின் தேசிய நாளான ஜூலை 1 ஆம் திகதி முதல் சட்டப்பூர்வ கஞ்சா விற்பனை தொடங்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, உருகுவே நாடும், அமெரிக்காவின் 5 மாகாணங்களும் கஞ்சா விற்பனைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தற்போது கள்ளச் சந்தையில் கஞ்சா விற்கப்படுவதால் சிறார்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே, அதன் விற்பனையை சட்டப்பூர்வமாக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கனடாவில், சட்டத்துக்குப் புறம்பான முறையில் கஞ்சாவை விற்பனை செய்வதன் மூலம், சமூக விரோதிகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

இதன்காரணமாக, ஏராளமான சிறார்களின் எதிர்காலமும், இந்த சமூகமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் அந்தச் சந்தை சமூக விரோதிகளின் கைகளிலிருந்து பறிக்கப்படும். சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்படும். தனி நபரது கஞ்சா பயன்பாட்டின் அளவுக்கும் நெறிப்படுத்தப்படும்.

Image result for canada cannabis

கனடா உள்பட பல நாடுகளில், சிறார்களுக்கு பீர் கிடைப்பதைவிட கஞ்சா கிடைப்பது மிக எளிதாக இருக்கிறது என்பதுதான் உண்மையான நிலைமை.

இந்த விவகாரத்தில் கனடா எடுத்துள்ள துணிச்சலான முடிவை அத்தகைய நாடுகளும் பின்பற்றும் என நம்புகிறேன் என்று அந்த பேட்டியில் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்றி கனடா வாழ் தமிழ் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

80 வயதான பொன்னம்மாள் என்பவர் கூறுகையில், “அரசே இப்படி செய்கிறார்கள், என்ன சொல்வது?

முக்கியமாகச் சிறுவர்களும், இளைஞர்களும் தீய பழக்கங்களுக்கு ஆட்படுவார்கள். கஞ்சா உடலுக்கும், மனதிற்கும் நல்லதல்ல. மேலும், அந்த துர்நாற்றத்தைத் தாங்க முடியாது.” என்று தெரிவித்தார்.

இவரது மகள் ப்ரீத்தி கூறும்போது. “என் கவலை என்னவென்றால் இளைஞர்களால் இதை எந்த அளவில் நிறுத்த வேண்டும் என்று அனுமானிப்பது கடினம்.

குறுகிய மற்றும் நீண்ட நாள் விளைவுகளைப் பற்றி படிக்கும் போது மார்பு நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கும் மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன,” என்றார்.

“சட்டரீதியாக இதனை அனுமதித்தால் கலப்படம் இல்லாத தரமான பொருள் கிடைக்கும். கஞ்சா பிடிப்பவர்கள் எப்படி இருந்தாலும் அதை தேடி பிடிப்பார்கள். குறைந்தபட்சம் தரமில்லாத பொருளை உபயோகப்படுத்த மாட்டார்கள்,” என்றும் அவர் கூறினார்.

வாசன் மற்றும் கீதா தம்பதியினர் கூறும்போது, “சட்டரீதியாக மருத்துவ உபயோகத்திற்காக ஏற்கனவே கஞ்சாவை கொண்டுவந்தாயிற்று.

அதிக வலியில் துடிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இது போதாதா? உற்சாகத்திற்காக சட்டபூர்வமாக இதை கொண்டு வருவதை முற்றிலும் எதிர்க்கிறோம். இளைஞர்களைப் போதைக்கு அடிமை ஆக்கிவிடும்” என்று அவர்கள் தமது கருத்தை வௌியிட்டனர்.

(huge milestone occurred effort legalize recreational marijuana Canada)

<MOST RELATED CINEMA NEWS>>

Tamil News Group websites