மண்டைதீவு கொடூர படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு இன்று!!

0
564
32 year anniversary fishermen killed navy island Skull observed today

 

யாழ்ப்பாணம் – மண்டை தீவில் கடற்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. (32 year anniversary fishermen killed navy island Skull observed today)

இதன்போது குருநகர் சனசமூக நிலையம் முன் அமைந்துள்ள நினைவு தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தலில் மக்களுடன் யாழ்மாநகரசபை மேயர் மற்றும் அருட்தந்தையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படுகொலை சம்பவமானது; 1986 ஜூன் 10 ஆம் நாள் அன்று, குருநகர் துறையில் இருந்து தூயஒளி என்ற படகு மீனவர்களுடன் புறப்பட்டது. மண்டைதீவு கடலில் மீனவர்கள் 27 பேர் இறங்கினர் ஏனையோர் வலை வளைக்க ஆயத்தமாக படகில் இருந்தனர்.

இதன் போது கடற்படையினர் கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அணுகினர். மீனவர்கள் தாம் பொது மக்கள் எனத் தெரிவிக்கும் பொருட்டு தமது கைகளை உயர்த்தினர் ஆனாலும் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர். மீனவர்களின் படகுகளையும், மீன் வலைகளையும் சேதப்படுத்தினர். அங்கிருந்த அனைத்து மீனவர்களையும் கோடரி, வாள், கத்தி , பொல்லாலும் துவக்குப்பிடியாலும், வெட்டியும், கொத்தியும், அடித்தும் சித்திரவதைக்குடப்படுத்தி படுகொலை செய்தனர்.

மீனவர்களின் கண்கள் குத்தப்பட்டுக் குழிகளாயின. சிலரது வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டிருந்தது. இதில் குருநாகரைச் சேர்ந்த 30 மீனவர்களும், மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவருமாக 31 பேரும் கொல்லப்பட்டனர்.

tags :- 32 year anniversary fishermen killed navy island Skull observed today
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites