எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்

0
1065
america north Korea leaders visit Singapore today latest news

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடன் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவித்துள்ளன. america north Korea leaders visit Singapore today latest news

கனடாவில் நடைபெற்ற ஜி.7 மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் டிரம்ப் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கும் கிம் ஜோங் உன் இற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் சென்டோஸா தீவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்றுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- வட கொரிய ஜனாதிபதி கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா ஜனாதிபதி சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

‘அமைதியை ஏற்படுத்த வட கொரிய ஜனாதிபதி கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது’ என்று முன்னதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.

கடந்த 18 மாதங்களாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியமை குறிப்பிடத்தக்கது.
merica north Korea leaders visit Singapore today latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites