மீண்டும் இருவருக்கும் இடையில்…….! நடந்தது என்ன?

0
483
president mathripala srisena prime minister ranil wickramasinghe again

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. president mathripala srisena prime minister ranil wickramasinghe again

குறித்த இருவருக்கும் இடையில் இரண்டு மணித்தியால பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் அதனை தொடர்ந்து குறித்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரதமருக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவருக்கு தங்காலை செல்ல ஹெலிகொப்டர் தாம் வழங்கவில்லை என்பதோடு,

100 நாள் வேலை திட்டம் தொடர்பிலும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் பல்வேறு முரண்;பாடுகள் தோற்றம் பெற்றன.

இந்நிலையில், தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்து சமரசத்துடன் செயற்பட விரும்பும் மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க ஆகிய நான்கு அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான மங்கள சமரவீர மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பினை ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையிலேயே இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், 2020 வரை அரசாங்கத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
president mathripala srisena prime minister ranil wickramasinghe again

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites